Monday, May 13, 2013



உன் வட்டாரத்தில் உள்ள வசதிகளை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாய் என்பதை விளக்கி எழுது.

சிங்கப்பூர் ஓர் அழகான நாடு. இது ஒரு சுத்தமான நாடு. இந்த நாட்டில் பல வட்டாரங்கள் இருக்கின்றன. இவற்றில் மக்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கும் வட்டாரங்களில் பலவிதமான வசதிகள் உள்ளன. இந்த வசதிகளை நான் எவ்வாறு பயன்படுத்துகிறேன் என்பதை இந்தக் கட்டுரையில் விளக்கி எழுதப் போகிறேன்.

நான் வசிக்கும் வட்டாரம் செங்காங். இது சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் இருக்கிறது. இங்கு நிறைய வசதிகள் உள்ளன. செங்காங் வட்டாரத்தில் பள்ளிக்கூடங்கள், நூலகம், காவல் நிலையம், மருத்துமனை, உணவுக்கடைகள், பேரங்காடிகள், ஈரச்சந்தை போன்ற பல வசதிகள் உள்ளன. மேலும், இங்கு பேருந்து நிலையம், பெருவிரைவு இரயில் நிலையம் போன்ற வசதிகளும் உள்ளன.

என் வட்டாரத்தில் நிறைய வசதிகள் உள்ளன. நான் அவற்றை நன்கு பயன்படுத்துகிறேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. நான் பேருந்தைப் பயன்படுத்தி பள்ளிக்கூடம் செல்கிறேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும், நான் மற்ற இடங்களுக்குச் செல்லும்போது பெருவிரைவு இரயிலைப் பயன்படுத்துகிறேன். இது எனக்குப் பயணம் செய்ய மிகவும் வசதியாக இருக்கிறது.

என் வட்டாரத்தில் பெரிய மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு நிறைய மக்கள் செல்கிறார்கள். நானும் எனக்கு நோய் ஏற்படும் போது அங்கே சென்று மருத்துவரைப் பார்க்கிறேன். அங்குள்ள மருந்தகத்தில் எனக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்குகிறேன். மேலும், என் வட்டாரத்தில் உள்ள நூலகத்திற்கு நான் அடிக்கடி செல்வேன். அங்கிருந்து நான் நிறைய நூல்களை இரவல் வாங்கிப் படிக்கிறேன். இது எனக்கு மிகவும் பயன்படுகிறது.

இதுபோன்று பல வசதிகள் என் வட்டாரத்தில் உள்ளன. அவற்றை நான் நன்கு பயன்படுத்தி வருகிறேன். இந்த வசதிகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன. என்னைப் போல் என் வட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கும் இந்த வசதிகள் பலவழிகளில் பயன்படுகின்றன. ஆகவே என் வட்டாரத்தை மிகவும் நல்ல வட்டாரம் என்று சொல்லலாம்.

No comments: