Tuesday, May 22, 2007

எச்சவினை

எச்சவினை


முற்றுவினை / வினைமுற்று

பொருள் முடிந்து நிற்கும் சொல்

(எ.கா)

  • நான் உணவு உண்டேன்.
  • பாலு பாடம் படித்தான்.
  • பறவை பறக்கிறது.
  • நான் மலேசியாவுக்குச் செல்வேன்.
  • எச்சவினை

    பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல். இது பொருள் முடிவுபெறுவதற்காய் இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்கும்.

    (எ.கா)

  • நான் படித்த கதை அருமையாக இருந்தது.
  • நான் அழகிய ஓவியத்தை வரைந்து முடித்தேன்.
  • கலா வானொலியில் கேட்ட பாட்டைப் பாடிப் பழகினாள்.
  • எச்சவினை வகைகள்:

    1.பெயரெச்சம்

    பெயர்ச்சொல்லைப் பொருள் முடிக்கும் சொல்லாகக் கொள்ளும் எச்சம் பெயரெச்சமாகும்.

    (எ.கா)

  • படித்த பாடம்
  • நடித்த சிறுமி
  • சிரித்த குழந்தை
  • ஓடிய குதிரை
  • 2.வினையெச்சம்

    வினைச்சொல்லைப் பொருள் முடிக்கும் சொல்லாகக் கொள்ளும் எச்சம் வினையெச்சமாகும்.

    (எ.கா)

  • சாப்பிட வந்தான்.
  • எழுதி முடித்தான்.
  • ஓடிப் பிடித்தான்.
  • தாவிச் சென்றது.
  • சொல்லி முடித்தார்.
  • 2 comments:

    Unknown said...

    useful
    thanks 👍

    Unknown said...

    yeah